பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Wednesday, November 19, 2014
பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள்
பகுதிநேர சிறப்பாசிரியர் செய்திகள் - தமிழ்நாடு
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான சிறப்புச் செய்தி (17 / 11 / 2014) :
சென்னையில் இன்று (17 / 11 / 2014) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில்
சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், கல்வி அமைச்சர், முதன்மைக்கல்விச் செயலாளர், SSA திட்ட இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நிலை குறித்து கலந்துரையாடினர்.
இதில், மாநில அமைப்பாளர் திரு. கு.சேசுராஜா, மாநிலத் துணை அமைப்பாளர் திரு.ஆனந்தராஜ், மாநிலத் தலைவர் திரு.ஜெயச்சந்திர பூபதி, மாநில செயலாளர் திரு. D.ராஜா தேவகாந்த் மற்றும் மாநில பொருளாளர் திரு.ஜான்சன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் நமது முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலின் முடிவுகள் :
1. மத்திய அரசிடமிருந்து நிதியானது ஒருபகுதி மட்டுமே வந்துள்ளது. முழுத்தொகையும் வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வு ரூ. 2000 /- விரைவில் வழங்கப்படும். நிலுவைத்தொகையானது ஏப்ரல் 2014 முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
2. மாற்றுப்பணிக்கு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்.
3. அதனைத் தொடர்ந்து ஊதியம் முழுமையாக ECS முறையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
4.பணிநிரந்தரம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.
என்று தெரிவிக்கப்பட்டது.
* * * முக்கிய இணைப்பு :
-----------------------------------
இறுதியாக மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. கே.சி. வீரமணி அவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ஒன்று வந்து சேரும். செய்தித்தாளைப் பாருங்கள். நான் கையெழுத்திட்டு விட்டேன் என்று தெரிவித்தார்.
பொன். சங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment