பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Friday, November 21, 2014
டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்
கல்விச் செய்தி: டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்:தமிழக அரசு உத்தரவு - வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்.
மொத்தம், 100 மதிப்பெண்களில், 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், 5 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு காலியிடத்திற்கும், ஐந்து விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
மாநில, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டத்தை தயாரிக்கும். தேர்வு, மூன்று மணி நேரம், ஒரே தாளாக நடத்தப்படும்.'அப்ஜக்டிவ்' அடிப்படையில், 190 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், அரை மதிப்பெண் என, 95 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்தும் பணி, இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் பட்டியல் வெளியிடுதல் என, அனைத்து பணிகளையும் டி.ஆர்.பி., மேற்கொள்ளும்.தேர்விற்கு, 500 ரூபாய் கட்டணம்; உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
5 மதிப்பெண்கள் எப்படி?
எண் தகுதி மதிப்பெண்
1. கூடுதல் கல்வித்தகுதி 0.5
2. முன்தகுதி (அரசு அல்லாதது) 0.5
3. அரசுப் பணி தகுதி 1
4. என்.சி.சி.,உட்பட கூடுதல் தகுதி 1.5
5 தோற்றப் பொலிவு 1.5
மொத்தம் 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment