பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Friday, November 21, 2014

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் (Part Time Teacher) இனி பகுதி நேர பயிற்றுநர்கள் (Part Time Instructor) என அழைக்கப்படுவர்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளுக்கு ஓவியம், உடற்கல்வி, தையல் பயிற்சிகளை வழங்க பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு 2011ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் குறிப்பிட்ட பாடவேளைகள் (வாரத்துக்கு 3 நாள்கள்) மட்டும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியத்தை ரூ.7000ஆக உயர்த்தி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஆணையில் (ஆணை எண் 186) கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 15,169 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் ஊதியம் ரூ.7000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 தேதியிட்டு வழங்கப்படும். இனி வரும் காலங்களில் சிறப்பாசிரியர்களுக்கு மின்னணு முறையில் (ECS) ஊதியம் வழங்கப்படும். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் (Part Time Teacher) இனி பகுதி நேர பயிற்றுநர்கள் (Part Time Instructor) என அழைக்கப்படுவர் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment