பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Sunday, December 28, 2014

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல் சேலம், டிச.28- தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில சேர்மன் சோலை எம்.ராஜா தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி, செயலாளர் நரசிம்மன் ஆகியோர் வரவேற்றனர். மாநில தலைவர் ஜெயசந்திரபூபதி, மாநில செயலாளர் ராஜாதேவ காந்த், பொருளாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சேசுராஜா, துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானத்தை விளக்கி பேசினர். இந்த கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரத்து 549 பேருக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அளித்த தமிழக முதல்-அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வி செயலர், இயக்குனர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இயக்குனர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறப்பாசிரியர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு தடை விதித்து முன்பு இருந்தது போல் வேலைவாய்ப்பு அலுவலக மூப்பின்படி பணி அமர்த்த வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மதுரையில் அடுத்த மாதம் கோரிக்கைகள் விளக்க மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பாகிஸ்தானில் 150 குழந்தைகள் இறந்ததற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment