பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, January 6, 2015
கலை ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம் - தினகரன்
கோவை: தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம் ஊக்க ஊதியம் தமிழக அரசு அறிவித்தபடி ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையை ரூ.14 ஆயிரத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். அரசாணைகள், நீதிமன்ற தீர்ப்புகள், போட்டித் தேர்வு நடைமுறை குறித்த விளக்கங்கள் மற்றும் சிறந்த ஓவிய படைப்புகள் அடங்கிய ஆண்டு மலர் வெளியிடப்பட்டு அனைத்து கலை ஆசிரியர்களுக்கு வழங்குதல், சஸ்பெண்ட் செய்த கலை ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவிட்டதற்கு கலை ஆசிரியர்கள் வரவேற்கிறது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டத்தலைவர் கனகசபாபதி உட்பட கலை ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment