பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, January 27, 2015
ஓவிய கலையில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு அவசியம் - தினமலர்
ஊட்டி : "ஓவியக் கலையில் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களின் மன அழுத்தத்தை களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், ஓவிய ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் இடைநிலை பயிற்சி பட்டறை, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி துவக்கி வைத்து பேசுகையில்,""பள்ளிகளில், ஓவிய ஆசிரியர்களுக்கு நேரம் இருக்கும்; எனவே, மாணவர்கள் மத்தியில் ஓவியக்கலை மற்றும் அவர்கள் மத்தியில் உள்ள இசை உட்பட பிற திறமைகளை வளர்க்க உதவி வேண்டும்; அதன் மூலம், மாணவ, மாணவியரின் மன அழுத்தம் குறையும்; படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும்,'' என்றார்.
இப்பயிற்சியில், மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், 30 பேர் பங்கேற்றனர். சிறப்பு கருத்தாளராக ஆசிரியர் பாஸ்கரன், கருத்தாளர்களாக ஆசிரியர்கள் சிவஞானம், சுந்தரவடிவு ஆகியோர் பயிற்சி வழங்கினர்.ஓவியக் கலையின் ஆரம்ப நிலைகள் துவங்கி, ஸ்டென்சில் கட்டிங், துணி, பாட்டில் மற்றும் பானையில் ஓவியம் வரைதல், வீணாகும் தண்ணீர் பாட்டில்களை, கலைநயமிக்க பொருட்களாக மாற்றுதல், தெர்மாகோல் கட்டிங் மூலம் வடிவமைப்புகள் போன்றவை, ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன."இந்த பயிற்சிகளை, ஓவிய ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு கற்றுக் கொடுத்து, அவர்களின் ஓவியத் திறமையை வளர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாளான இன்று, ஆசிரியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், படைப்புகள், காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment