பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Sunday, March 15, 2015
பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டம் சேலம் மார்ச் 8 2015 தினத்தந்தி வாயிலாக
தினத்தந்தி:
பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டம்
சேலம், மார்ச். 15-
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சேலம் டவுனில் உள்ள வாசவி சுபிட்ஷா ஹாலில் நடந்தது. தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் சோலை எம்.ராஜா தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நரசிம்மன் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழகத்தில் பணிபுரியும் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கும், 6 மாத நிலுவை தொகை ரூ.12 ஆயிரம் வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பகுதிநேர ஆசிரியர்களை வரும் கல்வியாண்டில் முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்புதின நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment