பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Thursday, March 12, 2015

கோவையில் பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சேர்மன் பங்கேற்பில் நடைபெறவுள்ள மாவட்ட பொது கூட்டம்...

- பொன். சங்கர், மாநில செய்தித்தொடர்பாளர், தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வருகின்ற 14.03.2015 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் கோவையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சேர்மன் திரு. சோலை M ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள், பணிமாற்றம், பணிநிரந்தரம் குறித்த முக்கியச்செய்திகள் மற்றும் பல முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார். பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம் : மாநகராட்சி திருமண மண்டபம். No. 8, மார்கெட், லட்சுமி காம்ப்ளக்ஸ் அருகில்., கிராஸ்கட் ரோடு , காந்திபுரம், கோவை.

No comments:

Post a Comment