பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Monday, March 9, 2015
சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட அளவிலான கூட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க சேர்மேன் திரு.சோலை.எம்.ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
ஞாயிற்றுக்கிழமை (08.03.2015) அன்று சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட அளவிலான கூட்டம் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில சேர்மேன் திரு.சோலை.எம்.ராஜா அவர்கள் தலைமையில் சேலம் வாசுவி சுபிக்ஷா ஹாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
1) தமிழகத்தில் பணிபுரியும் 16,459 பகுதிநேர ஆசிரியர்களிஉன் மாத ஊதியம் ரூ.5000 -இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் 6 மாத நிலுவைத் தொகையான ரூ.12000 வழங்கியதற்கும் சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
2)பகுதிநேர ஆசிரியர்களை வரும் கல்வி ஆண்டில் (2015-2016) முழுநேர ஆசிரியர்களாக பணி அமர்த்த தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
3)சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாதத்தின் முதல் தேதியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
4) 2015 ஜூன் 14-ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின நாளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இக்கூட்டத்திற்கு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில சேர்மேன் திரு.சோலை.எம்.ராஜா அவ்ர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.ஜி.கணேசன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.ஜெகதீசன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஒன்றிய பொருப்பாளர்களும்,தமிழக அளவில் உள்ள பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து இருபால் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment