பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Tuesday, April 14, 2015

பகுதிநேர ஆசிரியர்களால் நிரம்பி வழிந்த நங்கவள்ளி, மேச்சேரி,கொளத்தூர் ஒன்றியங்களுக்கான வட்டார அளவிலான பகுதிநேர ஆசிரிய சங்க கூட்டம்

செவ்வாய்க்கிழமை (14.04.2015) அன்று சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக வட்டார அளவிலான பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம் நங்கவள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு : 1) தமிழகத்தில் பணிபுரியும் 16,459 பகுதிநேர ஆசிரியர்களிஉன் மாத ஊதியம் ரூ.5000 -இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் 6 மாத நிலுவைத் தொகையான ரூ.12000 வழங்கியதற்கும் சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 2)தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிநேர ஆசிரியைகளுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். 3) பகுதிநேர ஆசிரியர்களை எந்தவொரு தேர்விற்கும் உட்படுத்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. - இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும் சேலம் மாவ‍ட்டத்தை சேர்ந்த ஒன்றிய பொருப்பாளர்களும், நங்கவள்ளி,மேச்சேரி,கொளத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த பகுதிநேர ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment