பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Saturday, February 7, 2015
சனிக்கிழமை (07.02.2015) சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சேலம் அண்ணா பூங்காவில் நடைபெற்றது
சனிக்கிழமை (07.02.2015) சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சேலம் அண்ணா பூங்காவில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
1) மாதத்தின் முதல் தேதியில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்(எஸ்.எஸ்.ஏ) அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
2) நிலுவையில் உள்ள 6 மாத தொகையை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) சேலம் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியராக பணியில் இருந்து இறந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் அவர்களின் குடும்பத்தினருக்கு கொடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4) பிப்ரவரி மாத இறுதியில் சேலம் மாவட்டம் ஆலோசனை கூட்டம் திரு. சோலை.எம்.ராஜா தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக மாநில தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் ஜி.கணேசன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெகதீசன் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஒன்றிய பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment