பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Wednesday, February 18, 2015
பகுதிநேர ஆசிரியர்களின் வித்தியாசமான முயற்சி
விரைவில் தமிழக அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் கணினி ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து பயனுள்ள இணையதளங்களையும் மற்றும் பயனுள்ள மென்பொருள்களையும் எளிமையாக அனைத்து தரப்பு மக்களும் கையாளும் வகையில் தமிழ் வருணனையுடன் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வீடியோ வடிவில் வெளியிட முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். இதற்காக விருப்பமுள்ள கணினி ஆசிரியர்களை ஒருங்கிணைக்க உள்ளோம். மேலும் உடற்கல்வி ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் முயற்சியால் மாணவர்கள் பெறும் விருதுகளை புகைப்படத்துடன் அதே இணையதளத்தில் வெளியிட உள்ளோம். அதே போல் ஓவிய ஆசிரியர்களின் சிறந்த ஓவியங்களையும் அதற்காக மாணவர்கள் பெறும் விருதுகளையும் அதே இணையதளத்தில் வெளியிட விரும்புகிறோம். அதேபோல் அனைத்து துறைகளின் தகவல்களையும் வெளியிட விரும்புகிறேன். உங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறோம்.இந்த முயற்சி நிறைவேறும் பட்சத்தில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை இயக்குநர்களின் பார்வைக்கு நமது செயல்பாடுகள் எளிமையாக எடுத்து செல்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment