பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Sunday, March 22, 2015

தேனி மாவட்டத்தில் இன்று 21.03.2015 சனிக்கிழமை நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டம்

தேனி மாவட்டத்தில் இன்று 21.03.2015 சனிக்கிழமை நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதற்கும், நிலுவைத்தொகை வழங்கியதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது. மாண்புமிகு.தமிழக முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு முக்கியப்பணி நிமித்தம் காரணமாக முதல்வர் வர இயலவில்லை. அவருக்குப்பதிலாக அவரது சகோதரர் கூட்டத்திற்கு வந்திருந்தார். மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் சேர்மன் சோலை எம் ராஜா அவர்கள் பங்கேற்பில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தின் சாராம்சம் : தமிழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் மிகச்சரியான முறையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் ஆசியுடன் விரைவில் நல்ல செய்தி வந்தடையும். இச்சமயத்தில் வேறு எதுவும் கூறமுடியாது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது.இதனை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம். இவ்வாறு கூட்டத்தில் பலராலும் பேசப்பட்டது.

No comments:

Post a Comment