பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, March 3, 2015
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி :
02/03/2015 திங்கட்கிழமை பகுதிநேர ஆசிரிய சங்க சேர்மன் திரு.சோலை எம்.ராஜா அவர்கள் தலைமையில் பகுதிநேர ஆசிரிய சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி செயலாளர் அவர்களை நேரில் சந்தித்தது. இதில் பின்வரும் கோரிக்கைகள் இடம் பெற்றது. ஆறு மாத நிலுவைத்தொகையினை உடனே வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிமாறுதல் அடைய வழிவகை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, பகுதிநேர ஆசிரியர்களுக்கான நிலுவைத்தொகை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும், பணிமாறுதலுக்கு பதிலளிக்கையில் விருப்ப மாறுதலுக்கு மட்டும் தற்போது ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும், விருப்ப மாறுதல் தொடர்பாக சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறும் கூறினார். மேலும் பணிநிரந்தரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு சாதகமான முடிவு விரைவில் எட்டப்படும் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment