பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Sunday, June 21, 2015
பகுதிநேர சிறப்பசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி. 25.6.15 அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குகான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது
அன்பார்ந்த சிறப்பாசிரியர்களே !
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் பெரும் முயற்சியினால் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம். நமது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பணியிட மாறுதல் பெறுவதற்கான மகிழ்ச்சியான செய்தியினை தங்களிடம் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சியடைகின்றோம். (186/14) அரசாணை பெற்றாலும் அது நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதனை பெறுவதற்கு நமது சங்கத்தின் சேர்மன் சோலை எம் ராஜா அவர்களின் உறுதுணையோடு நமது மாநில நிர்வாகிகள் விடா முயற்சியால் அரசையும், அரசு அலுவலர்களையும் அணுகி எடுத்து கொண்ட முயற்சியின் விளைவாக வருகின்ற 25.6.15 அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குகான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இச்செயல் நடை முறைக்கு வர உத்தரவு இட்ட தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், நிதி, கல்வி, கூட்டுறவு துறை சார்ந்த அமைச்சர்களுக்கும், கல்வித்துறைச் செயலாளர், SSA மாநில திட்ட இயக்குநர் அவர்களுக்கும்....நன்றி...நன்றி...
இச்செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வெற்றி பெறச்செய்த தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சேர்மன் சோலை M ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி....நன்றி...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment