பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Tuesday, June 23, 2015
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
சேலம் (ஜுன் 26 2015):
சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு:
இச்சந்திப்பின் பலனாக கீழ்கண்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
1) பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பாக ஜூன் 26 2015 முதல் ஜூலை 7 2015 வரை WORKSHOP நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள காலிபணியிடம் மற்றும் உபரி பணியிடங்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு அனவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவருக்கு அனுப்பப்படும்.
2) அதன் பிறகு SSA திட்ட அலுவலரிடமிருந்து பணிநிரவல் மற்றும் கலந்தாய்விற்கான திட்டம் வகுக்கப்பட்டு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- இச்சந்திப்பில் சேலம் மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.ஜி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment