பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...
கவனத்திற்கு,
Sunday, June 21, 2015
சென்னையில் 20.06.2015 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிப்பு
சென்னையில் 20.06.2015 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தனர். சிறப்பு நிகழ்வாக அம்மா அவர்களின் போயஸ்கார்டனில் முதல்வரின் பாதுகாப்பு எல்லை வரை நமது மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரிய மாநில பொறுப்பாளர்கள் சென்றிருந்தனர். இருவருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப் பட்டது. இல்லத்திற்குள் சென்று அங்கே முதல்வரின் முதன்மை சிறப்பு தனி உதவியாளர் (PA) அவர்களிடம் நமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சேர்மன் திரு. சோலை M ராஜா மற்றும் உடற்கல்வித் துறையைச் சேர்ந்த மாநில செய்தி தொடர்பாளர் திரு.ராஜா சுரேஷ் ஆகிய மாநில பொறுப்பாளர்கள் வழங்கினர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர், இக்கோரிக்கை மனுவை நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜுலை முதல் வாரத்தில் நடைபெறும் சட்டமன்ற தொடரில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment