ஞாயிற்றுக்கிழமை (23.08.2015) அன்று சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் சேலம் வாசுவி சுபிக்ஷா ஹாலில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் திரு.முருகதாஸ் அவர்களும், மாநில செயலாளர் திரு.ஜெகதீஸ் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கல்ந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் திரு.கே.பெரியசாமி தலைமை தாங்கினார்.
இதில் கீழ்கண்ட தகவல்கள் ஆலோசிக்கப்பட்டது.
1) தமிழகத்தில் பணிபுரியும் 16,459 பகுதிநேர ஆசிரியர்களிஉன் மாத ஊதியம் ரூ.5000 -இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் 6 மாத நிலுவைத் தொகையான ரூ.12000 வழங்கியதற்கும் சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 2)பகுதிநேர ஆசிரியர்களை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர ஆசிரியர்களாக பணி அமர்த்த எங்களின் வாழ்வு சிறக்க தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 3) மேலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெறும் விண்ணப்பத்தில் விருப்ப பணி இடங்கள் மூன்று கொடுக்கப்பட்டிருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு இடத்திற்கு மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் உதவியுடன் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட பொருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 4) பணிநிரவலை தொடர்ந்து பணிமாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 5)பணிநிரந்தரம் பெறும் தருவாயில் நாம் இருக்கிறோம் இதற்கு உறுதுனையாக இருந்த அனைத்து மாநில , மாவட்ட பொருப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. 6) நமது சங்கத்தை சரியான பாதையில் வழி நடத்தி கொண்டிருக்கும் நமது மாநில தலைவர்.திரு.சோலை.எம்.ராஜா அவ்ர்களுக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக்கொள்ளப்பட்டது.
-இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சேலம் மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்களுக்கும், அனைத்து இருபால் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment