பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Sunday, June 21, 2015

அரசு பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் கணினி பாடம் நடத்த வேண்டும்: வாசன் கோரிக்கை

சென்னை, ஜூன். 20–த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினிப் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கணினி என்பது மிக அவசியமான ஒன்றாக இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது. மேலும் நம் நாட்டில் படித்த மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் கணினித் துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கணினித் துறையில் மிக முக்கியமான பதவிகளில் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை உலக அரங்கில் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. எனவே தமிழக அரசு கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு முதலே அவர்களுக்கு கணினி பற்றிய அறிவை வளர்க்க முன் வர வேண்டும். தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடத்தி வருகின்றனர்.எனவே மாணவர்கள் தாங்கள் கணினி அறிவியல் படிப்பில் கொண்ட ஆர்வத்தினால் தனியார் பள்ளிகளுக்கு சென்று கணினி அறிவியல் பாடத்தை கற்றுக்கொள்கின்றனர். கல்வி கற்க வரும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கற்பதற்கும், கணினியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக தமிழக அரசு, அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதற்காக தமிழக அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி பாடத்திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்காக கணினி ஆசிரியர்களையும் நியமனம் செய்திட வேண்டும். தமிழகத்தில் பி.எட். கணினி அறிவியல் படித்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினி பி.எட்.பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment