பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய பக்கங்கள் இதோ...

கவனத்திற்கு,

பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் தொடர்பான படிவத்தினை பதிவிறக்கம் செய்ய SALARY FORMS என்ற TAB கிளிக் செய்க. பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைகளை பதிவிறக்கம் செய்ய PART TIME TEACHERS GO என்ற TAB கிளிக் செய்க.

Monday, November 30, 2015

SALEM DIVISIONAL LEVEL ATHELETIC SPORTS MEET SHOT PUT(2015) UNDER 19 FIRST PLACE IN R.MEGA GGHSS , MAGUDANCHAVADI...இதற்கு உறுதுணையாக இருந்த இப்பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் திரு.வி.வி.பழனிசாமி அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

சேலம் மண்டல அளவில் நடைபெற்ற பெண்கள் கோ-கோ போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரங்கனூர் பள்ளி மாணவிகள் சாதனை

சேலம் மண்டல அளவில் நடைபெற்ற பெண்கள் கோ-கோ போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி, அரங்கனூர் பள்ளி மாணவிகள் மண்டல அளவிலான கோ-கோ போட்டியில் சங்ககிரி கல்வி மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு இரண்டாவது இடம் பெற்றுள்ளனர் மற்றும் கோவை SNS கல்லூரியின் சார்பில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் சேலம் மாவட்ட அளவிலான open meet-ல் கலந்து கொண்டு முதலிடம் பெற்றதோடு, பரிசுத்தொகையாக ரூ.5000 ம் பெற்று சாதனை படைத்தனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த இப்பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் திரு.G.பாலசுப்ரமணி அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
  • 1. மண்டல அளவிலான கோ-கோ போட்டியில் சங்கககிரி கல்வி மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு இரண்டாவது இடம் பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் :
  • 2. கோவை SNS கல்லூரியின் சார்பில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் சேலம் மாவட்ட அளவிலான open meet-ல் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் :
  • பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெருமழை காரணமாக விடுக்கப்பட்ட பள்ளி விடுமுறை நாட்களை டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2016 மாதங்களில் ஈடுகட்டலாம்

    பகுதிநேர ஆசிரியர்களுக்கு பெருமழை காரணமாக விடுக்கப்பட்ட பள்ளி விடுமுறை நாட்களை டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2016 மாதங்களில் ஈடுகட்டலாம் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

    Monday, October 19, 2015

    சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பேரணி - 31.08.15

    பணியிடமாறுதல், பணி நிரவல் சிக்கலில் பகுதிநேர பயிற்றுநர்கள்

    சிறப்பு ஆசிரியர்கள் கவனஈர்ப்பு கூட்டம் பணி நிரந்தரம் கோரி – தின செய்தி

    சென்னை, செப். 27- அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினார்கள். முதல்-அமைச்சருக்கு நன்றி கடந்த 2012-ம் ஆண்டு அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களாக 16 ஆயிரத்து 549 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ெசன்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டு, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவி்க்கும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநில நிர்வாகக்குழு தலைவர் முருகதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலை எம்.ராஜா, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேசுராஜா, பூபதி, ஜெகதீசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவன ஈர்ப்பு கூட்டத்துக்குப் பின்னர் மாநில நிர்வாகக்குழு தலைவர் முருகதாஸ் கூறியதாவது:- தொகுப்பூதிய பணி கடந்த 2012-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை முதல்-அமைச்சர் நியமித்தார். ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாதம் ரூ.7 ஆயிரம் என்ற தொகுப்பூதியம் பெற்று வருகிறோம். இதற்காக, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தற்போது விலைவாசி உயர்ந்துவிட்டதால், ரூ. 7 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் நாங்கள் சிரமப்படுகிறோம். எங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கிய முதல்-அமைச்சர், பணிநிரந்தரம் செய்து எங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றுகோரி, கவன ஈர்ப்பு கூட்டத்தை நடத்தி உள்ளோம். இவ்வாறு முருகதாஸ் கூறினார். கவன ஈர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

    பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரவல் குறித்த ஆணை

    Monday, August 31, 2015

    தமிழக அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

    தமிழக அளவில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான கவன ஈர்ப்பு பேரணி சேலம் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. திங்கட்கிழமை (31.08.2015) அன்று 1.00 மணீயளவில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க தலைவர் திரு.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். இப்பேரணியில் சுமார் 600 க்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இப்பேரணியானது வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித போட்டி தேர்விற்கும் இடமளிக்காமல் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். அதை நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே மாண்புமிகு.தமிழக முதல்வர். அம்மா அவர்கள் அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பகுதிநேர ஆசிரியர்கள் தனித்தனியாக கையொப்பமிட்டு தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு FAX வாயிலாக அனுப்பி வைத்தனர். இப்பேரணியின் இறுதியில் சேலம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.கணேசன் மற்றும் அனைத்து சேலம் மாவட்ட மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இப்பேரணியில் கலந்து கோண்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

    Sunday, August 23, 2015

    சேலம் மாவட்ட அளவிலான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிநிரந்தரம் தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (23.08.2015) அன்று சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் சேலம் வாசுவி சுபிக்‌ஷா ஹாலில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் திரு.முருகதாஸ் அவர்களும், மாநில செயலாளர் திரு.ஜெகதீஸ் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கல்ந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் திரு.கே.பெரியசாமி தலைமை தாங்கினார்.
    இதில் கீழ்கண்ட தகவல்கள் ஆலோசிக்கப்பட்டது.
  • 1) தமிழகத்தில் பணிபுரியும் 16,459 பகுதிநேர ஆசிரியர்களிஉன் மாத ஊதியம் ரூ.5000 -இருந்து ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் 6 மாத நிலுவைத் தொகையான ரூ.12000 வழங்கியதற்கும் சேலம் மாவட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
  • 2)பகுதிநேர ஆசிரியர்களை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர ஆசிரியர்களாக பணி அமர்த்த எங்களின் வாழ்வு சிறக்க தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • 3) மேலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பணி நிரவல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெறும் விண்ணப்பத்தில் விருப்ப பணி இடங்கள் மூன்று கொடுக்கப்பட்டிருந்தும் நூற்றுக்கு மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு இடத்திற்கு மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் உதவியுடன் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட பொருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
  • 4) பணிநிரவலை தொடர்ந்து பணிமாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • 5)பணிநிரந்தரம் பெறும் தருவாயில் நாம் இருக்கிறோம் இதற்கு உறுதுனையாக இருந்த அனைத்து மாநில , மாவட்ட பொருப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
  • 6) நமது சங்கத்தை சரியான பாதையில் வழி நடத்தி கொண்டிருக்கும் நமது மாநில தலைவர்.திரு.சோலை.எம்.ராஜா அவ்ர்களுக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக்கொள்ளப்பட்டது.
    -இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு.நரசிம்மன் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சேலம் மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்களுக்கும், அனைத்து இருபால் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
  • Tuesday, June 23, 2015

    சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.

    சேலம் (ஜுன் 26 2015): சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் பணி மாறுதல் தொடர்பாக சேலம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: இச்சந்திப்பின் பலனாக கீழ்கண்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
  • 1) பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பாக ஜூன் 26 2015 முதல் ஜூலை 7 2015 வரை WORKSHOP நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள காலிபணியிடம் மற்றும் உபரி பணியிடங்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு அனவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவருக்கு அனுப்பப்படும்.
  • 2) அதன் பிறகு SSA திட்ட அலுவலரிடமிருந்து பணிநிரவல் மற்றும் கலந்தாய்விற்கான திட்டம் வகுக்கப்பட்டு முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெறும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
  • - இச்சந்திப்பில் சேலம் மாவட்டத்தலைவர் திரு. கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர் திரு.எம். நரசிம்மன், மாவட்ட பொருளாளர் திரு.ஜி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • Sunday, June 21, 2015

    சென்னையில் 20.06.2015 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிப்பு

    சென்னையில் 20.06.2015 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தனர். சிறப்பு நிகழ்வாக அம்மா அவர்களின் போயஸ்கார்டனில் முதல்வரின் பாதுகாப்பு எல்லை வரை நமது மாநில பொறுப்பாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரிய மாநில பொறுப்பாளர்கள் சென்றிருந்தனர். இருவருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப் பட்டது. இல்லத்திற்குள் சென்று அங்கே முதல்வரின் முதன்மை சிறப்பு தனி உதவியாளர் (PA) அவர்களிடம் நமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை சேர்மன் திரு. சோலை M ராஜா மற்றும் உடற்கல்வித் துறையைச் சேர்ந்த மாநில செய்தி தொடர்பாளர் திரு.ராஜா சுரேஷ் ஆகிய மாநில பொறுப்பாளர்கள் வழங்கினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர், இக்கோரிக்கை மனுவை நேரடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜுலை முதல் வாரத்தில் நடைபெறும் சட்டமன்ற தொடரில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

    அரசு பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் கணினி பாடம் நடத்த வேண்டும்: வாசன் கோரிக்கை

    சென்னை, ஜூன். 20–த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினிப் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கணினி என்பது மிக அவசியமான ஒன்றாக இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது. மேலும் நம் நாட்டில் படித்த மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் கணினித் துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கணினித் துறையில் மிக முக்கியமான பதவிகளில் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை உலக அரங்கில் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. எனவே தமிழக அரசு கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு முதலே அவர்களுக்கு கணினி பற்றிய அறிவை வளர்க்க முன் வர வேண்டும். தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நடத்தி வருகின்றனர்.எனவே மாணவர்கள் தாங்கள் கணினி அறிவியல் படிப்பில் கொண்ட ஆர்வத்தினால் தனியார் பள்ளிகளுக்கு சென்று கணினி அறிவியல் பாடத்தை கற்றுக்கொள்கின்றனர். கல்வி கற்க வரும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கற்பதற்கும், கணினியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக தமிழக அரசு, அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதற்காக தமிழக அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கணினி பாடத்திட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்காக கணினி ஆசிரியர்களையும் நியமனம் செய்திட வேண்டும். தமிழகத்தில் பி.எட். கணினி அறிவியல் படித்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினி பி.எட்.பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு 20.06.2015 அன்று சங்கத்தின் சேர்மன் திரு.சோலை எம் ராஜா அவர்கள் தலைமையில் தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக தனது ஆதரவுக் கடிதம் அளிக்கப்பட்டது.

    அப்போது எடுக்கப்பட்ட புகைப்பட நகல்கள் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு 20.06.2015 அன்று சங்கத்தின் சேர்மன் திரு.சோலை எம் ராஜா அவர்கள் தலைமையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சார்பாக தனது ஆதரவுக் கடிதத்தை உள்துறை அமைச்சர். திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களிடம் ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டது.

    பகுதிநேர சிறப்பசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி. 25.6.15 அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குகான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது

    அன்பார்ந்த சிறப்பாசிரியர்களே ! தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் பெரும் முயற்சியினால் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம். நமது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பணியிட மாறுதல் பெறுவதற்கான மகிழ்ச்சியான செய்தியினை தங்களிடம் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சியடைகின்றோம். (186/14) அரசாணை பெற்றாலும் அது நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதனை பெறுவதற்கு நமது சங்கத்தின் சேர்மன் சோலை எம் ராஜா அவர்களின் உறுதுணையோடு நமது மாநில நிர்வாகிகள் விடா முயற்சியால் அரசையும், அரசு அலுவலர்களையும் அணுகி எடுத்து கொண்ட முயற்சியின் விளைவாக வருகின்ற 25.6.15 அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குகான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இச்செயல் நடை முறைக்கு வர உத்தரவு இட்ட தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும், நிதி, கல்வி, கூட்டுறவு துறை சார்ந்த அமைச்சர்களுக்கும், கல்வித்துறைச் செயலாளர், SSA மாநில திட்ட இயக்குநர் அவர்களுக்கும்....நன்றி...நன்றி... இச்செயலுக்கு மிகவு‌ம் உறுதுணையாக இருந்து வெற்றி பெறச்செய்த தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சேர்மன் சோலை M ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி....நன்றி...!

    ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் நமது சங்கத்தினர் அம்மா அவர்களுக்கு ஆதரவு

    சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு ஆதரவளித்து, நமது சங்கத்தின் சார்பில் கடிதம் கொடுக்க உள்ளோம். 20.06.15 அன்று ஆர்.கே. நகரில் நடைப்பெறும் பொதுக்கூட்டத்தில் நமது சங்கத்தினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும் இக்கூட்டத்திற்கு வருகைத்தரும் அமைச்சர்களிடம், நமது நீண்டநாள் நிறைவேறா கோரிக்கைகள் மனுவாக்கப்பட்டு, கொடுக்கப்பட உள்ளது. விரைவில் பணி நிரந்தரம், பணியிட மாறுதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகிய கோரிக்கைகள் நிறைவேற, அரசாணை வெளியாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    Tuesday, June 9, 2015

    'முழுநேர ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்'

    பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய காலத்தில் சம்பளம் வழங்கவும், பகுதிநேர ஆசிரியர் நிலையை, முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று, காஞ்சிபுரம் சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 'பகுதிநேர ஆசிரியர்கள் என்ற நிலையை மாற்றி, பணி நிரந்தரம் செய்து, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட, நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    SSA - பகுதிநேர பயிற்றுநர்களின் பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் அறிவுரைகள்

    SSA - பகுதிநேர பயிற்றுநர்களின் பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மாநில திட்ட இயக்குநரின் அறிவுரைகள் சார்ந்த அரசாணையை பதிவிறக்கம் செய்ய கீழே கண்ட இணைப்பைச் சொடுக்கவும். அகஇ - "பகுதிநேர ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புகளும்"